எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே போகவில்லை என்பதால் மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவுடன் கூட்டணியா?அமமுகவுடன் கூட்டணியா? என இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. தற்போது வரை நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். முதல்வர் பழனிச்சாமி தொடர்ந்து பரப்புரையில் உள்ளதால் அவரை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அழைப்பு வந்ததும் கூட்டணி குறித்து பேசப்படும்.
இந்த தேர்தலில் 2 இடங்கள் கேட்க உள்ளோம். சசிகலாவை மையப்படுத்தி அனைவரும் பேசுவது, அவரிடம் ஏதோ சிறப்பம்சம் உள்ளது. தற்போது உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவர் வீடு திரும்பியதும் அவரை சந்திக்க நேரம் கேட்போம், எங்களுக்கு நேரம் ஒதுக்கும் பட்சத்தில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து உடல் குறித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் விசாரிப்போம் என கூறியுள்ளார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…