ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம்.!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும், கிறிஸ்துமஸ் அன்று (டிசம்பர் 25) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!
அந்த வகையில், இன்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மதியம் 3 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.