#BREAKING: முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை.., அரசு அதிகாரிகள் தகவல் ..!
தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கொரோனா பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தற்போது ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், முழு ஊரடங்கு கிடையாது ஆனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என தெரிவித்தார்.
ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..? அல்லது கட்டுப்பாடு கடுமையாக்கப்படுமா..? என்ற அதிகாரப்பூர்வ தகவல் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.