தமிழகத்தில் தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக அரசு கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உயிரிழந்தனர். தமிழகத்தில் இரு தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.மொத்தமாக தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள குடியாத்தம் மற்றும் திருவெற்றியூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 -ஆம் தேதி வரை இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா சூழலால் மக்கள் நலன் கருதி தற்போதைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025