காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை – முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ், குளச்சலில் நடைபெற்ற ஊர்வலத்தில் தடியடி விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் தடியடிய நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, குளச்சலில் தடையை மீறி ஊர்வலம் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள், தடுத்து நிறுத்திய போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறினார். மேலும் பேரணி சென்றவர்கள் தாக்கியதில் 4 போலீசார் காயம் அடைந்திருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், காங்கிரஸ் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025