நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை ! உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி சுயேட்சை வேட்பாளர் சங்கர சுப்பிரமணியன் மனு ஒன்றை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்பொழுது நாங்குநேரி இடைதேர்தலை நடத்த தடை இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேர்தல் ஆணையத்தின் முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பாது என்றும் தேர்தலை தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025