சாத்தான்குளம் வழக்கில் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி.!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள அனைவருமே உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்குகளை மாறி மாறி தொடுத்து வருகின்றனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதார் தனக்கு ஜாமீன் வழங்க கோரிக்கை வைத்திருந்தார் அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ரகு கணேஷ் இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மாற்ற வேண்டும் எனவும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான இன்று வந்தது. அப்போது, ரகு கணேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வரக்கூடிய விசாரணைக்கு தடை விதிக்கவும், ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால், நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் அதற்கு தடையும் விதிக்க முடியாது எனவும் இனிமேல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராவது மனுதாக்கல் செய்தால் காவல் ஆய்வாளர் ஸ்ரீதார் மனுவுடன் இணைத்து ஒன்றாக விசாரிக்கபப்டும் என நீதிபதி தெரிவித்தனர்.