செப்டம்பர் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் 20 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொற்று அதிகம் உள்ள போதும் கேரளா தமிழகம் இடையே பொது போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கேரளாவை தனிமைப்படுத்த விரும்பவில்லை.
கேரளா எல்லையை ஒட்டியுள்ள 9 மாவட்டங்களை கண்காணிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது. 9 மாவட்டங்களில் 100% தடுப்பூசி செலுத்துவது இலக்கு. தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்துக்கு தமிழ்நாட்டைக் கொண்டுவர அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா வரும் ஆனால், 97.5% உயிர் பாதுகாப்பு நிச்சயம் என தெரிவித்தார்.
தமிழகம் எல்லா துறைகளில் முதலிடத்தில் உள்ள போதும், கடந்த ஆட்சி காலத்தில் வீணாக்கப்பட்ட 103 நாட்களால் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 9 வது இடத்தில் உள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி தமிழகத்திற்கு தடுப்பூசி நாள், அன்று மாநிலம் முழுவதும் 10,000 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.
சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.…
ஆந்திரப் பிரதேசம்: பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என திருமலை திருப்பதி தேவசுதானம் (TTD)…
மரகத கல்லின் சிறப்புகள் மற்றும் மரகத லிங்கம் அமைந்துள்ள இடங்களை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . சென்னை…
சென்னை : இன்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மையக்குழு ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை…
ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள்…
சென்னை : இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும்…