தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை – உச்ச நீதிமன்றம்
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு.
மின் கட்டண உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மின்கட்டண உயர்வு விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு 2026- 27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது. 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மின்கட்டண உயர்வை எதிர்த்து வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்நிலையில்,தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.