மருத்துவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம்.! மருத்துவர்கள் சங்கம் தகவல்.!

Default Image

வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்களை கைது செய்ய கூடாது என தமிழ்நாடு மருதவிர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.  

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், அரசு மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் ஆகிய 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், இவர்கள் மீது காவல்துறையினர்  304ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை குறிப்பிட்டு , தமிழ்நாடு அரசு மருத்துவரக்ள் சங்கம் இது குறித்து முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது .

அதில் , சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் மீது 304ஏ பிரிவை நீக்க வேண்டும் எனவும், விசாரணை அறிக்கையில் கவன குறைவு என்று மட்டுமே இருக்கிறது. இது சிவில் குற்றப்பிரிவில் மட்டுமே வரும், மிக கடின கவன குறைவு எனும் கிரிமினல் வழக்குகள் கீழே வராது. எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், காவல் துறை கைது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு, அந்த விசாரணையில் குறிப்பிடபடவில்லை. அதனையும் மீறி கைது நடவடிக்கை மேற்கொண்டால், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கம், தேசிய மருத்துவர்கள் சங்க முக்கிய நபர்கள், செவிலியர் உட்பட மற்ற மருத்துவ ஊழியர்கள் என அனைத்து மருத்துவ ஊழியர்களும் தமிழகத்தில் போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்