டிராக்டர் ட்ரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை – உயர்நீதிமன்றம்!

Default Image

டிராக்டர் ட்ரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவசாய பயன்பாட்டிற்க்கான டிராக்டர் உற்பத்தி செய்யும் ஈரோட்டை சேர்ந்த சக்தி விநாயகா இன்ஜினியரிங் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய மோட்டார் வாகன திருத்த விதிகளில் ட்ராக்டர் ட்ரைலரை மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த போது அந்த இணையதளத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த நடைமுறை தமிழகம் தவிர பிற மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் விவசாயிகள் வாங்கும் டிராக்டரை இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி ஆர் சுரேஷ் குமார் அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் இணையதளத்தில் ஒப்புதல் பெறாமல் வாகனத்தை பதிவு செய்ய முடியாது எனவும், ஒப்புதல் பெறுவதற்காக பதிவு செய்யும்படி ட்ரைலர் இல்லாமல் பதிவு செய்யும்படி கூற முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதி மோட்டார் வாகனங்களில் பதிவு அவசியம், ஆனால் ட்ரைலரை மோட்டார் வாகனமாக கருத முடியாது எனக் கூறி, ட்ரைலர் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல் பெற தேவையில்லை எனவும், மத்திய அரசின் இணையத்தில் இனி பதிவு செய்து ஒப்புதல் பெறாமல் பதிவு செய்ய போக்குவரத்துத் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்