மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து இருப்பதால் முடிவடைய இருந்த ஊரடங்கு இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டு இருப்பதால் ஊரடங்கை மே ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு (நாளை) ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும் என்று கூறினார். அதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது என்றும் தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என்று அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 20க்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கலாம் என்று மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று மத்திய தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்த குழு முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, அதனுடைய ஆலோசனைகளை முதல்வர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்க உள்ளனர். இந்த ஆலோசனை குறித்து முதல்வர் ஆராய்ந்து முடிவெடுக்க உள்ளார். இதனால் தமிழக அரசு அறிவிக்கும் வரை தற்போது உள்ள கட்டுபாடுகள் அனைத்தும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…