பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை மண்ணடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய நிலத்திலேயே ஒரே ஒரு மதம் தான் இதுவரை ஆர்எஸ்எஸ், பாஜகவை வைத்து சண்டை போடுகிறது. காங்கிரஸ் என் இனத்தின் எதிரி, பாஜக மானுடர்குலத்தின் எதிரி.
என் இனத்திற்கு இந்திய காட்சிகள் அவசியம் இல்லை. இது என் கொள்கை முடிவு கோட்பாடு. இந்தியாவிற்காக ஒரு கட்சியே தேவையில்லை என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை வரைவு. மாநிலத்தில் அந்தந்த மாநிலம் காட்சிகள் ஆளுவோம். இந்தியாவை ஆளும் போது கூடி பேசி ஆளுவோம். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி. இங்கு கூட்டணி ஆட்சி இருக்கு தவிர கூட்டாட்சி இல்லை.
இன்றைக்கு பாஜகவுடன் அதிமுக இருக்கு, முன்பு திமுக பாஜகவுடன் இருந்தது. நாளைக்கு இருக்காது என்று யாரு உறுதி அளிக்கிறீங்க, தலைவர், பொதுச்செயலாளர், இளைஞரணி தலைவர் என யார் உறுதி அளிக்கிறீங்க. அடுத்த மூன்று ஆண்டுகளில் இது நடக்கும், மத்தியில் இருப்பவர்களுடன் அனுசரித்து போனால்தான் மாநிலத்திற்கு நலத்திட்டங்களை கொண்டுவரமுடியும் என்று பேசுவார்கள்.
எந்த காலத்திலும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுதாவுடன் கூட்டணி கிடையாது. தனித்துதான் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். ஒரே ஒரு முறை முக ஸ்டாலினை சொல்ல சொல்லுங்கள் எந்த காலத்திலும் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று சொல்ல சொல்லுங்கள், எப்படி நம்ப முடியும். அவர்தான் சந்திரமுகியாக மாறிவிட்டார் என்று சீமான் விமர்சித்து பேசியுள்ளார்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…