நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்வேளை என்பதால் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை அனைத்து கட்சியினரும் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது என தேர்தல் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக சார்பில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபிமுனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
சூடுபிடிக்கும் தேர்தல் களம்! அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை!
இந்த கூட்டம் முடிந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தற்போது அதிமுக கூட்டணியில் யார் இருக்கிறார்கள், தொகுதி பங்கீடு குறித்து எந்த ஆலோசனையும் இதுவரை நடத்தப்படவில்லை. யார் எங்களுடன் கூட்டணி அவர்களுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்படும் என்பது எல்லாம் தேர்தல் நெருங்கும் நாள் முன்னர் தான் தெரியும். அப்போது கண்டிப்பா எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லுவோம் என கூறினார்.
மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா என்பதை பற்றி கேட்கையில், பாஜக உடன் ஒட்டுமில்லை. உறவுமில்லை. அந்த கூட்டணி முறிந்தது முறிந்தது தான். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை தன்னை முன்னிலைப்படுத்தி பேசி வருகிறார். அவர் பாஜகவை முன்னிலைப்படுத்தவில்லை. அவரை பொறுத்தவரை நடக்காத விஷயத்தை கூறி வருகிறார். அது அவர்கள் கட்சிக்கே தெரியும். கும்பிடு போட்டு கட்சி நடத்த வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை.
2016 நாடாளுமன்ற தேர்தலில் அம்மா (ஜெயலலிதா) தனித்து போட்டியிட்டு ஜெயித்தார்கள். தற்போது எங்கள் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விரைவில் கூறுகிறோம் என்றும் , இந்தியா கூட்டணியில் அந்த கட்சிகளுக்குள்ளேயே முரண்படுகள் உள்ளன. அவர்களுக்குள் ஒத்த நிலைப்பாடு இல்லை என்றும் கூறினார் .
மேலும், யார் தவறு செய்தாலும் அதனை சுட்டி காட்டி நாங்கள் தேர்தலை எதிர்கொள்வோம். மாநில நலனை புறக்கணிப்பவர்களை நாங்கள்மக்கள் முன் வெளிப்படுத்துவோம். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தமிழகத்தில் என்ன செய்துள்ளது என்ன செய்யவில்லை என்பதை வெளிப்படுத்துவோம் என்று கூறினார்.
கல்வி மாநில கொள்கையின் கொன்டு வரவேண்டும் என திமுகவினர் கூறுகின்றனர். ஆளுநர் உரிமை பற்றியும் பேசுகின்ற்னர். இதனை 15 ஆண்டுகளாக மத்திய ஆட்சியி கூட்டனியில் இருக்கும் போதே இதனை ஏன் செய்யவில்லை.? என தெரியவில்லை. தமிழகம் மீது மாநில அரசும், மத்திய அரசும் கடைபிடிக்கும் மக்கள் விரோத போக்கை தோலுருத்து காட்டுவோம். ஆளுநர் வேண்டாம் என்றால் அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதே ஆளுநர் உரிமை மசோதா குறித்து கருத்து சொல்லி இருக்கலாம். ஆட்சியில் இருக்கும் போது ஒன்று பேசுவார்கள். ஆட்சியில் இல்லாத போது ஒன்று பேசுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டு பேசினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…