[Image Source : PTI]
அண்ணாமலை மீதான பாஜகவின் நடவடிக்கையை பொறுத்து கூட்டணியை மறுபரிசீலனை செய்யலாம் என இபிஎஸ் தகவல்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்றும் இதனால் தான், ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளதாகவும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய கருத்து, அதிமுக – பாஜக இடையே வார்த்தை மோதல் போக்கை உருவாகியுள்ளது. அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உள்பட நிர்வாகிகள் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
விருப்பம் இல்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சித்து, அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சமயத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பற்றி பேசிய அண்ணாமலைக்கு நிர்வாகிகள் கடும் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், அண்ணாமலையை கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என்று கேள்வி குறியாகியுள்ளது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் பழனிசாமியிடம் கட்சியினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பில் புகார் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சரியான தீர்வு கிடைக்காத பட்சத்தில் கூட்டணியை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு என எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது ஓரிரு நாட்களில் பாஜக தேசிய தலைமை நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…