பாஜகவின் எந்த செயலும் அங்கு எடுபடாது – கேஎஸ் அழகிரி
இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளார் ராகுல் காந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி ராகுல் காந்தி நடப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் சமீபத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி, ராகுல் காந்தியின் வருகையினால் தென்மாவட்டங்கள் எழுச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கை பிறந்துள்ளது. இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவது தான் ஒரு தலைவருக்கு பண்பு, அந்த பண்பினை ராகுல் காந்தி செய்துள்ளார். எனவே பாஜகவின் எந்த செயலும் அங்கு எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.