200 இல்ல…234 தொகுதிகளிலும் நாமதான் வெற்றி பெறப் போகிறோம் – மு.க.ஸ்டாலின்

Default Image

தேர்தல் நேரத்தில்  பொங்கல் பரிசு தருகிறார்கள் என செஞ்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.

செஞ்சியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி இனி கனவு காண முடியாது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல், தேர்தல் நேரத்தில்  பொங்கல் பரிசு தருகிறார்கள். தேவைப்படும் நேரத்தில் மக்களுக்கு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அரசு பணத்தை தேர்தலுக்காக அதிமுக அரசு பயன்படுத்துகிறது என்று குற்றசாட்டியுள்ளார். திமுகவுக்கு சாதகமாக வரும் கருத்துக்கணிப்புகளை கண்டு அலட்சியம் வேண்டாம், தொடர்ந்து களப்பணியாற்றுவோம். 200 இல்ல, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெற போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என மக்கள் மத்தியில் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்