சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என அவர் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு ஒரு வாரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் இரண்டு தவணையாக வசூலிக்க வேண்டும். கொரனோ பரவல் குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு எடுக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டால் ஒரு வகுப்புக்கு எத்தனை மாணவர்களை அமர வைப்பது என்பது பற்றி ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்தார்.
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை தொடங்குவது பற்றி தற்போது யோசிக்கவில்லை. ஆன்லைனில் கல்வி, கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடங்கள் நடத்தப்படுவது தொடரும். பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தளர்வுகள் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
பத்தாம் வகுப்பு சான்றிதழில் மார்க் இருக்காது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்ணுக்கு பதில் மாணவர் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் என தெரிவித்தார்.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…