+2 மாணவர்கள் கவனத்திற்கு… பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.!

பொறியியல் படிப்பிற்கான அண்ணா பல்கலைகழக தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1.5 லட்சம் காலி இடங்கள் உள்ளன. 2023-24 கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் ஆனது கடந்த மே 5 முதல் ஜூன் 4 வரை நடைபெற்றது. இதில் 2.3 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 1.5 லட்சம் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இறந்தனர்.
இவர்களுக்கான பொது கலந்தாய்வு வருகிற ஜூன் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. சிறப்பு கலந்தாய்வு ஜூன் 5ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த மாணவர்களுக்கான நேரம் தேதி குறிப்பிட்டி எந்த தேதிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்பது குறித்த தரவரிசை பட்டியலானது இன்று வெளியாக உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் இதனை தெரிந்து கொள்ளலாம்.