ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பாதிப்புகள் அதிகம் – அன்புமணி ராமதாஸ்
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என அன்புமணி ராம்தாஸ் குற்றசாட்டு.
கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, கடலூர் மாவட்ட பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாமக-வைச் சேர்ந்த 40 பேர் கைது ஸ்ஹ்எய்யப்பட்டனர். மேலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மாவட்ட முழுவதும் பாமகவினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் பேட்டி
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், தமிழக அரசு ஒருபக்கம் விவசாயத்துக்கு அப்ட்ஜெட்டை பெறுகிறார்கள். மற்றோரு பக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி, துன்புறுத்தி காவல்துறையை வைத்து நிலங்களைகளை பிடிங்கி, அதை என்எல்சி-யிடம் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறாரகள்.
என்எல்சி-யால் கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்எல்சி-யால் 8 அடிக்கு கிடைத்த நிலத்தடி நீர் 1000 அடிக்கு சென்றுவிட்டது. தனியாரிடம் ஒப்படைக்கு முடிவு செய்தபின், வேகவேகமாக நிலங்களை கையகப்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காற்று மாசு காரணமாக பொதுமக்கள் பலவிதமான வியாதிகளுக்கு உள்ளாகியுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என குற்றம்சாட்டியுள்ளார்.