என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் – தமிழக அரசின் ஆலோசனை தொடங்கியது!
சென்னை தலைமைச் செயலகத்தில் என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை.
என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக, என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.