என்எல்சி விவகாரம்.! முதல்வருடான பேச்சுவார்த்தை திருப்தி.! திருமாவளவன் பேட்டி.!
என்எல்சி விவகாரம் தொடர்பாக முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை எடுத்து கூறியுள்ளோம். முதல்வருடனான இந்த சந்திப்பு மனநிறைவு இருக்கிறது. – விசிக தலைவர் திருமாவாவன்.
கடலூர், என்எல்சி தொழிற்சாலையானது தங்கள் சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுட்டனர். தங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படவில்லை என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
முதல்வருடன் ஆலோசனை :
மக்கள் எதிர்ப்புக்கு பல்வேறு கட்சியினர் தங்கள் ஆதரவை அளித்து அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, சென்னை தலைமை செயலகத்தில் விசிக கட்சி தலைவர் திருமாவளவன், இடதுசாரி கட்சிகள் தலைவர் பாலகிருஷ்னன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என்எல்சி விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனையில் எடுப்பட்டனர்.
சுமூக முடிவு : அதற்கடுத்ததாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து முதல்வரிடம் பிரச்சனைகளை கொண்டு வந்துள்ளோம். அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்து, அதில் ஒரு சுமூகமாக முடிவு , வரையறை எட்டப்பட்டது.
பேச்சுவார்த்தை திருப்தி :
இருப்பினும், அங்குள்ள விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் வகையிலும், நிலம் இல்லா கூலி தொழிலாளிகள் நிலை பற்றியும், ஒரே இடத்தில் நிலம் உள்ள வேறு வேறு நபர்களுக்கு இழப்பீடு தொகையில் வேறுபாடு இருந்தது குறித்தும் முதல்வரிடம் எடுத்து கூறியுள்ளோம். முதல்வருடனான இந்த சந்திப்பு மனநிறைவு இருக்கிறது என்றும், விசிக தலைவர் திருமாவாவன் பேசினார்.