#BREAKING : என்எல்சி-க்கு ரூ.5 கோடி அபராதம்- தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Default Image

நெய்வேலி என்எல்சி- க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி 2-ம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில்  படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தற்போது வரை என்எல்சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உள்ளது.உயிரிழந்தவர்களில் 2 பேர் இளநிலை பொறியாளர்கள்,  9 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள், 2 பேர் நிரந்தர தொழிலாளர்கள் ஆவார்கள்.

என்எல்சி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம்   இழப்பீடு வழங்கப்படும் என்றும்  படுகாயம் அடைந்தோருக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கப்படும்.  என என்எல்சி நிர்வாகம் அறிவித்தது.இந்நிலையில் நெய்வேலி என்எல்சி- க்கு ரூ.5 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.என்எல்சி.யில் பாய்லர் வெடி விபத்து மற்றும் தொழிலாளர்கள் மரணங்கள் தொடர்பான விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்