NLC விபத்து- நாளை கடையடைப்பு.!

Published by
கெளதம்

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு.

கடலூர் மாவட்டம் நெய்வேலி NLC 2-ம் அனல் மின்நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்,  15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

NLC நிர்வாகத்தை கண்டித்து உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்கள், கிராம மக்கள் அனல் மின் நிலையம் முன் நிவாரணம் கேட்டு முற்றுகையிட்டனர். இந்நிலையில், பாய்லரை முறையாக பராமரிக்காத காரணத்தால் என்.எல்.சி. பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெய்வேலியில் நாளை கடையடைப்பு என தெரிவிக்கப்படுள்ளது. நெய்வேலியில் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் நாளை அடைப்பு என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளார்கள்.

Published by
கெளதம்

Recent Posts

அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!

அமெரிக்க தேர்தல் : விண்வெளியில் இருந்து வாக்களித்த சுனிதா வில்லியம்ஸ்!

அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…

24 mins ago

டிரம்புக்கு பிரகாசமாகும் அதிபர் பதவி? ‘எலக்ட்ரால்’ வாக்குகளில் டிரம்ப் முன்னிலை!

வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை! அப்போ கமலா ஹாரிஸ்?

அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…

2 hours ago

அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் களம் முதல்… அதிமுக கூட்டம் வரை!

சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…

3 hours ago

உறுதியானது ஐபிஎல் மெகா ஏல தேதிகள்! பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…

3 hours ago

குடை முக்கியம்!! “சென்னையில் டூ டெல்டா வரை.. கடலோர மாவட்டங்களில் மழை” – பிரதீப் ஜான் தகவல்.!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago