கடந்த சில நாட்களாக கடலூரில் சேத்தியாத்தோப்பு அருகே விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் ஈடுபட்டுள்ள நிலையில், இயந்திரங்கள் மூலம் நிலங்கள் சமன்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. மேலும், வளையமாதேவியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில் கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கிய நிலையில், விளைந்த பயிர்களை அறுவடைக்கு முன்பதாக அளிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், என்எல்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு முன்பாக, பாமக சார்பில் போராட்டம் நடைபெற்ற நிலையில், அது வன்முறையாக மாறிய நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மேலும், சில பாமக தொண்டர்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வளையமாதேவி கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது.
காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து புவனகிரி எம்எல்ஏ அலுவலகம் முன் அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில், விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…