#NivarCyclone : 145 கி.மீ வேகத்தில் சூறாவளி! இதுவரை இல்லாத அளவாக இது மிக கடுமையான சூறாவளியாக இருக்கும்!
இதுவரை இல்லாத அளவாக இது கடுமையான சூறாவளி புயலாக 145 கி.மீ வேகத்தில் வீச இருப்பதாகவும், கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலானது இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு நிவர் புயல் புதுச்சேரியை சுற்றியுள்ள காரைக்கால், மாமல்லபுரம் இடையே உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சுற்றியுள்ள காரைக்கால், மாமல்லபுரம் இடையே உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது என்றும், இதுவரை இல்லாத அளவாக இது கடுமையான சூறாவளி புயலாக 145 கி.மீ வேகத்தில் வீச இருப்பதாகவும், கடற்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தமிழ்நாடு தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.