நிவர் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்..! வானிலை மையம்.!
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரிக்கு அருகே நேற்று இரவு 11 .30 மணி முதல் 2.30 மணி வரை முழுமையாக கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுமையாக கரையை கடந்தது. தீவிர புயலாக வலுவிழந்த நிலையில் அடுத்த ஆறு மணி நேரத்தில் தொடர்ந்து நிவர் புயல் புயலாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்த பகுதிகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புயல் வலுவு குறைந்ததை அடுத்து படிப்படியாக பல பகுதிகளில் மழை குறைந்தது. தற்போது நிலப்பகுதிகளில் உள்ளதால் கனமழை மற்றும் காற்று நீடிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.