“நிவர்” புயல் முன்னெச்சரிக்கை ! தயார் நிலையில் 465 அவசரகால ஊர்திகள்

Default Image

“நிவர்” புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத் துறையால் தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் 465 அவசரகால ஊர்திகள் உள்ளது. 

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நிவர்  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத் துறையால் தமிழ்நாடு முழுவதும் 108 அவசரகால சேவை கட்டுப்பாட்டு மையம் மற்றும் 104 மருத்துவ உதவி மையம் ஆகியன பொது மக்களுக்கு உதவிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது.மேலும், கடலோர மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

தேவை ஏற்படின் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து 108 அவசரகால ஊர்திகளை வரவழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகனமழையால் தொலைத்தொடர்பு சேவை பாதிப்படைந்தாலும் தகவல்கள் கிடைக்கப்பெறும் வகையில் 108 அவசரகால ஊர்திகளை காவல் நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் நிறுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்றினால் மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து அவசரகால ஊர்திகளிலும் எரிபொருள் முழுவதுமாக நிரப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்