#BreakingNews : நிவர் புயலின் வேகம் அதிகரிப்பு ! 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் – வானிலை ஆய்வு மையம்
நிவர் புயலின் வேகம் அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர் புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.