அதிதீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல்! – வானிலை ஆய்வு மையம்
அதி தீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயலானதுஇன்றிரவு நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், அதி தீவிர புயலாக வலுப்பெறும் இந்த புயலானதுஇன்றிரவு நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. சுமார் 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயலானது, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதனையடுத்து, இன்றிரவு முதல் புயலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.