#நிவர் புயல்: கொட்டி தீர்த்த கனமழை., தாம்பரத்தில் 31 செ.மீ மழை பதிவு..!

The maximum in Tamil Nadu is 31 cm in Chennai Tambaram. Rain has been reported. Similarly, 28 cm in the villous.

நிவர் புயல் கரையை கடக்கும் போது தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக கரையை கடந்து அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரியில் இரவு 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், விழுப்புரத்தில் 28 செ.மீ. மேலும் புதுச்சேரியில் 23.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தது அதுமட்மில்லாமல் நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சேனை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.