மரியாதை முக்கியம்.! ஒரு முதலமைச்சரை இப்படியா நடத்துவது.? மு.க.ஸ்டாலின் காட்டம்.!

மு.க.ஸ்டாலின்: இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க நிதி ஆயோக் கூட்டத்தில் பங்குபெற உள்ளதாக முன்னர் மம்தா தெரிவித்து இருந்தார்.
இன்று தொடங்கிய நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தா, கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் வெளியேறினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், மற்ற முதல்வர்கள் 10- 20 நிமிடங்கள் பேசினர். அனால் எனக்கு 5 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு பிறகு மைக் ஆஃப் செய்யப்பட்டது. பாஜக அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்குகிறது என சரமாரியாக குற்றசாட்டை முன்வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.
நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பேனர்ஜிக்கு நிகழ்ந்தவை குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” இதுதான் கூட்டாட்சியா? ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?
எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சி தன்மைக்கு அனைவரது குரல்களுக்கும் ஒலிக்க வேண்டும். அதேபோல அதற்கான மரியாதையும் முக்கியம்.” என தனது கண்டனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு இருந்தார்.
Is this #CooperativeFederalism?
Is this the way to treat a Chief Minister?
The Union BJP government must understand that opposition parties are an integral part of our democracy and should not be treated as enemies to be silenced.
Cooperative Federalism requires dialogue and… https://t.co/Y6TKmLUElG
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025