கொரோனோ எங்களை தாக்காது… கைலாஷ் பிரதமர் அறிவிப்பு… டுவிட்டரில் கருத்து…

Default Image

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன  சாமியார் நித்யானந்தா மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடத்தல் வழக்கில் குஜராத் காவல்துறையினர்  நித்யானந்தாவை தேடியபோது அவர் தனது பெண் சீடர்களுடன் வெளிநாடு தப்பி ஓடியது தெரிய வந்தது. தப்பி ஓடிய அவர்  ஈக்வேடார் அருகே கைலாசா என்ற பெயரில் ஒரு தீவை அமைத்து தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் கைலாசா நாட்டில் குடியேற 40 லட்சம் பேர் இணையத்தில்  விண்ணப்பித்துள்ளதாக சாமியார் நித்யானந்தா காணொலி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

Image result for nithyanandhas twiter page

இந்நிலையில்  கற்பழிப்பு வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்து  உத்தரவிட்டது. மேலும் அவரை கைது செய்ய ஆணை  பிறப்பிக்கப்பட்டது. நித்யானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியை போலீசார் நாடினர். பின் உடனடியாக  புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்து நித்யானந்தாவை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீகைலாசா நாட்டின் பிரதமர் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட சாமியார் நித்யானந்தா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், கொரோனா வைரசால் நாங்கள் பாதிக்கப்படவில்லை. இது எதிர்காலத்திலும் எங்களுக்கு வராது. ஏனென்றால் பரமசிவன் எங்களைப் பாதுகாக்கிறார். காலபைரவர் எங்களுக்கு பாதுகாவலாக உள்ளார். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்