தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சாமியாரான நித்யானந்தா ஆவார்.பல கோடி ரூபாய்க்கு அதிபதியாக திகழும் இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனது ஆசிரமங்களை கட்டியுள்ளார்.
இவருடைய ஆசிரமங்கள் காரணமாக பல குற்றசாட்டுகள் வெளிவந்தபடி உள்ளன.இதுமட்டுமில்லாமல் பாலியல் புகார் ,இளம் பெண் கடத்தல் போன்ற பலவிதமான புகார்களில் காவல்துறையினர் இவரை தேடிவருகின்றன.
ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் இணையத்தில் ஒவ்வொருவரையும் கடுமையாக கிண்டல் செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.
நித்யானந்தாவின் தஞ்சை,திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆசிரமங்களை நிர்வகித்து வந்தவர் விஜயகுமார் ஆவார்.இவர் தற்போது பேட்டி ஒன்றில் நித்யானந்தா தன்னை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தியாக கூறியுள்ளார்.
இவ்வாறு ஆசிரமங்களில் நடக்கும் அக்கரமங்களை வெளியே அமல்படுத்தியதால் அவரின் சீடர்கள் தன்னை கொலை செய்வதாக மிரட்டுகின்றனர் என்று கூறியுள்ளார்.இதனால் எனக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்குமாறு சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அவர் நித்தியானந்தாவின் மோசடி குறித்த பல முக்கிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அதை மறைக்கவே அவரின் சீடர்கள் தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து குற்றச்சாட்டுக்கும் வீடியோவால் பதிலளிக்கும் நித்யானந்தாவின் அடுத்த வீடியோவை எதிர்பார்த்து நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…