“மாணிக்கவாசகர் வகித்த மதுரை ஆதினம் நித்தியானந்தாவிற்கே”..!ஆதின தடை நீக்கி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு…!!
மதுரை இளைய ஆதினமாக நித்தியானந்தா தொடர விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்ரவிட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்தின், 293ஆவது ஆதீனமாக, நித்யானந்தாவை கடந்த 2012ஆம் ஆண்டு அருணகிரிநாதர் நியமனம் செய்தார். இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கை விசாரித்த மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம், நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்தது.
இந்நிலையில் மதுரை ஆதின மடத்தின் 293 ஆவது ஆதினமாக நித்யானந்தா நியமனத்த தடைவிதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை இளைய ஆதினமாக இருக்க தடைவித்த கீழமை நீதிமன்றம் எதிரான நித்யானந்தாவின் மனு கடந்த 2014ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில், நித்யானந்தா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை உத்தரவுகளை பிறப்பித்தார்.
இன்று விசாரித்த நீதிபதி மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர அறநிலையத்துறை சட்டப்படி அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்.வழக்கு தொடர்ந்தவர்கள் அவ்வாறு அனுமதி பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.
எனவே, நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.இம்மாபெறும் ஆதினம் சைவ குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் பதவிவகித்த இந்த ஆதினத்தின் இளைய ஆதினமாக நித்தியானந்தா தற்போது இருப்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU