பல சர்ச்சைகளில் சிக்கி தேடப்பட்டு வரும் நபராக மாறியுள்ளார் நித்யானந்தா. இருந்தும் அவ்வப்போது விடீயோக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு கெத்து காட்டி வருகிறார். தன்மீது கூறப்படும் புகார், விமர்சனம் என அனைத்திற்கும் பதிலும் அளித்து வருகிறார்.
இவர் கைலாஷ் என்கிற தனி நாடு அமைத்து விட்டதாகவும், அந்நாட்டிற்கு தனி பாஸ்போர்ட், தனி குடியுரிமை உள்ளதாகவும் தகவல் பரவின. இந்த தனி தீவு ஈக்வேடார் எனும் நாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை ஈக்வேடார் நாடு மறுத்துவிட்டது. எங்களிடம் தஞ்சம் புக அனுமதி கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என விளக்கம் கூறிவிட்டனர்.
இந்நிலையில் இவர் மீதம், கைலாஷ் தனி நாடு மீதும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவரே வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். அதில், தன்னை பற்றியும் கைலாஷ் பற்றியும் அதிகமாக மீம்ஸ் போட்டு பிரபலமாக்கிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்படியே அந்த கைலாஷ் நாடு எங்கிருக்கிறது என்று கூறிவிட்டால் நான் அங்கே சென்றுவிடுவேன். என கிண்டலாக கூறியுள்ளார். மேலும் சொந்த ஊரில் தனக்கு பாஸ்போர்ட் கூட கொடுக்க மறுக்கிறார்கள் என கூறினார்.
மேலும், கைலாஷ் இணையதள பக்கத்திற்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் விருப்பம் தெரிவிப்பதாகவும், 8 லட்சம் இந்த பக்கத்தை பார்த்தால் சர்வர் பிளாக் ஆகிவிட்டது. எனவும், பழம்பெரும் சர்வேர் உபயோகப்படுத்தியதால் சர்வர் பிளாக் ஆகிவிட்டது. தற்போதுதான் அதனை பெரிய சர்வர்க்கு மாற்றியுள்ளோம். இதுவரை 12 லட்சம் பேர் கைலாஷ் நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்ததாக தகவல் கூறியுள்ளார். சிலநாடு எங்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பதக்கவும், கொஞ்சம் காத்திருங்கள். விரைவில் நல்ல செய்தி வரும் என்பது போல கூறியுள்ளார்.
இவர் குஜராத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் காசி, இமயமலை செல்வதாக கூறி சென்றுள்ளார். அவர் தேடப்படும் நபராக அறிவித்த பின்னர், குஜராத் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுவிட்டது. இன்னும் அவர் எங்கிருக்கிறார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…