நித்தியின் கைலாஷ் நாட்டிற்கு செல்ல 12 லட்சம் பேர் விருப்பம்! சர்வரே ஆட்டம் கண்டுவிட்டது!

Default Image
  • அந்த தனி தீவு எங்கிருக்கிறது என்று கூறுங்கள் நான் அங்கு சென்று விடுகிறேன் – நித்தியானந்தா கிண்டல்
  • 8 லட்சம் பேர் கைலாசம் இணைய பக்கத்தை பார்த்ததால் அந்த பக்கம் ஸ்தம்பித்தது. என நித்யானந்தா கூறியுள்ளார். 

பல சர்ச்சைகளில் சிக்கி தேடப்பட்டு வரும் நபராக மாறியுள்ளார் நித்யானந்தா. இருந்தும் அவ்வப்போது விடீயோக்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு கெத்து காட்டி வருகிறார். தன்மீது கூறப்படும் புகார், விமர்சனம் என அனைத்திற்கும் பதிலும் அளித்து வருகிறார்.

இவர் கைலாஷ் என்கிற தனி நாடு அமைத்து விட்டதாகவும், அந்நாட்டிற்கு தனி பாஸ்போர்ட், தனி குடியுரிமை உள்ளதாகவும் தகவல் பரவின. இந்த தனி தீவு ஈக்வேடார் எனும் நாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை ஈக்வேடார் நாடு மறுத்துவிட்டது. எங்களிடம் தஞ்சம் புக அனுமதி கேட்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன் என விளக்கம் கூறிவிட்டனர்.

இந்நிலையில் இவர் மீதம், கைலாஷ் தனி நாடு மீதும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவரே வீடியோ மூலம் பதிலளித்துள்ளார். அதில், தன்னை பற்றியும் கைலாஷ் பற்றியும் அதிகமாக மீம்ஸ்  போட்டு பிரபலமாக்கிய மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்படியே அந்த கைலாஷ் நாடு எங்கிருக்கிறது என்று கூறிவிட்டால் நான் அங்கே சென்றுவிடுவேன். என கிண்டலாக கூறியுள்ளார். மேலும் சொந்த ஊரில் தனக்கு பாஸ்போர்ட் கூட கொடுக்க மறுக்கிறார்கள் என கூறினார்.

மேலும், கைலாஷ் இணையதள பக்கத்திற்கு ஒரு நாளைக்கு 1 லட்சம் பேர் விருப்பம் தெரிவிப்பதாகவும், 8 லட்சம் இந்த பக்கத்தை பார்த்தால் சர்வர் பிளாக் ஆகிவிட்டது. எனவும்,    பழம்பெரும் சர்வேர் உபயோகப்படுத்தியதால் சர்வர் பிளாக் ஆகிவிட்டது. தற்போதுதான் அதனை பெரிய சர்வர்க்கு மாற்றியுள்ளோம். இதுவரை 12 லட்சம் பேர் கைலாஷ் நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்ததாக தகவல் கூறியுள்ளார். சிலநாடு எங்களுக்கு வரவேற்பு கொடுத்திருப்பதக்கவும்,  கொஞ்சம் காத்திருங்கள். விரைவில் நல்ல செய்தி வரும் என்பது போல கூறியுள்ளார்.

இவர் குஜராத்தில் உள்ள தனது ஆசிரமத்தில் உள்ளவர்களிடம் காசி, இமயமலை செல்வதாக கூறி சென்றுள்ளார். அவர் தேடப்படும் நபராக அறிவித்த பின்னர், குஜராத் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுவிட்டது. இன்னும் அவர் எங்கிருக்கிறார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்