என்.ஐ.டி பாலியல் அத்துமீறல் விவகாரம்! ராஜினாமா செய்தார் விடுதி காப்பாளர்!

திருச்சியில் தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில் மாணவிக்கு ஊழியர் பாலியல் தொல்லைக்கொடுத்ததை தொடர்ந்து விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினமா செய்துள்ளார். 

nit trichy

திருச்சி : தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினமா செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில், மாணவி ஒருவர் கடந்த ஆக 29-ஆம் தேதி, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார். விடுதியில், இன்டர்நெட் கனெக்டின் பழுது ஏற்பட்டிருந்த காரணத்தால் அந்த விடுதி நிர்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளரைச் சரி செய்து கொடுப்பதற்காக அழைத்துள்ளனர்.

அப்போது வேலை செய்துகொண்டிருந்த அந்த தொழிலாளி, அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்த மாணவிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லைக் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி சத்தம்போட்டு சக மாணவிகளை அழைத்துள்ளார். உடனடியாக, பெண்ணின் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த சக மாணவிகள் வேகமாக ஓடி வந்து உடனடியாக திருவெறும்பூர் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பின் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த ஊழியரைக் கைதும் செய்தனர்.

இந்த சம்பவத்தில் விடுதியின் பெண் வார்டன் பேபி என்பவர் மாணவி உடை அப்படி அணிந்திருந்த காரணத்தால், இந்த மோசமான சம்பவம் நடந்ததாக மாணவி மீது குற்றம்சாட்டிப் பேசியிருந்தார். இதனையடுத்து, விடுதியின் பெண் வார்டன் பேபி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டனை பணியிடை நீக்கம் செய்யக் கோரியும் போராட்டம் நடத்தினார்கள்.

பெண் வார்டன் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், உடனடியாக அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் எனவும் மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டுவிடிய விடியப் போராட்டமும் நடத்தினார்கள். போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சி மாவட்ட எஸ்.பி வருண் குமார் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பிறகு பேபியும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்த நிலையில், மாணவர்கள் போராட்டத்தை திரும்பப்பெற்றனர்.

அதனை தொடர்ந்து நேற்று பகல் திருச்சி என்.ஐ.டி நிறுவனம் தங்களது விடுதியில் மாணவிகளுக்குப் பலத்த பாதுகாப்பைக் கொடுப்போம் எனவும், மாணவிக்கு ஏற்பட்ட இந்த பாலியல் ரீதியான சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை அந்த விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து அதே விடுதியில் காப்பாளராக இருக்கும் சபிதா பேகம் மற்றும் மகேஷ் வரியும் ராஜினாமா செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்