நிர்மலாதேவிக்கு நெல்லையில் மனநலம் தொடர்பான சிகிச்சை

Default Image

நிர்மலா தேவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் . கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நீதி மன்ற வாயிலில் வெகு நேரம் நின்ற நிர்மலா திடீரென உக்கார்ந்து முனுமுனுக்க ஆரம்பித்தார். அப்போது, நான் குற்றவாளி இல்லை விடுதலை ஆகிவிட்டேன் என்றும், தன்னை குற்றம் சாட்டிய மாணவிகள் இறந்துவிட்டனர் என்றும் பேசினார்.

இந்த நிலையில் நிர்மலாதேவி, மனநலம் தொடர்பான சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray