நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து..! பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்..!

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் அழைத்து சென்றதாக கூறி பேராசிரியர் நிர்மலா தேவி மீது கூட்டு சதி உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.மேலும் முருகன் , கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளிவந்த நிலையில் விசாரணைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது முருகன் , கருப்பசாமி, ஆஜரானார்கள். ஆனால் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. இது குறித்து நிர்மலாதேவி வழக்கறிஞர் கூறுகையில் , அவர் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதை ஏற்காத நீதிபதி பரிமளாதேவி ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்டு பிறப்பித்தார். வழக்கை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024