தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும்- நிர்மலா சீதாராமன்

Published by
Venu
  • சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.இந்த சட்டமும் ஜனவரி 10-ஆம் தேதி அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கேரளா,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.  ஆனால் இந்த சட்டத்திற்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.இது தொடர்பாக பல இடங்களில் விளக்க கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது.அதன்படி கூட்டங்களும் நடத்தி வருகின்றது.

இதன் ஒருபகுதியாக சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,யாருடைய உரிமையையும் குடியுரிமை  பறிப்பதல்ல. உரிமையை கொடுப்பதுதான். உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை கொந்தளிக்க செய்கின்றனர். யாருடைய குடியுரிமை பறிபோகும் என்று கூறி வருகிறார்களோ அவர்களிடம் உண்மையை விளக்க தயார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்ட மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றினாலும் எந்த பாதிப்பும் கிடையாது.குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் சொல்வது சட்டத்துக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

Recent Posts

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

1 hour ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

2 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

4 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

4 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

5 hours ago

அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி துரோகிதான்…அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…

5 hours ago