இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை நேரலையில் காண இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நேரலைக்கு தமிழக்த்தில் போலீசார் தடை விதித்ததாக கூறி விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்டது. இதில், தனியார் கோயில் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை செய்ய அனுமதி தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே எல்இடி திரைகள் அமைத்து நேரடியாக பொதுமக்கள் காண பாஜகவினர் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக ஒரு வார காலமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ள இருந்தார். ஆனால் உரிய அனுமதி வாங்கவில்லை என கூறி அங்குள்ள எல்இடி திரைகளை அகற்ற கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
ராமர் கோயில்.. முதல் பூஜை செய்த பிரதமர் மோடி..!
இதனை தொடர்ந்து இந்த விழாவானது காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாயணம் கலந்துகொண்டார். ராமர் சிலை நிறுவப்பட்ட பின்னர், நிர்மலா சீதாராமன் சேத்தியாளர்களிடம் பேசுகையில், தனியர் இடங்களில் நேரலை ஒளிபரப்பு செய்ய அனுமதி தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது. அந்த உத்தரவு எத்தனை பேருக்கு சென்றடைந்தது என்று தெரியவில்லை.
பிரதமர் மோடி, ராமர் கோயில் விழாவுக்காக 11 நாள் விரதம் இருந்தார். 550 வருட காத்திருப்புக்கு பலனாக இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. பகவான் ராமருக்கு பிரதமர் மோடி பூஜை செய்யப்பட்ட நிகழ்வுகளை நாம் பார்த்தோம். இந்த நிகழ்வை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு இடங்களில் எல்இடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன. அதனை அவர்கள் திருப்பி கொடுக்க வேண்டும். இன்று நாடு முழுதுவம் அனைவரும் மன திருப்தியோடு இருக்கிறார்கள்.
கவால்துறையை கைக்குள் வைத்துக்கொண்டு, அறநிலையைத்துறை அடக்குமுறை, அராஜகத்தில் ஈடுபடுகிறது. இந்து உரிமைகளை பறிக்கும் நிகழ்வுகளை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறினார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…