ஏன்? சிலையைக்கூட இறக்குமதி? நம் நாட்டில் இல்லையா?? நிர்மலா சுளீர்
நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நாம் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பிரசிங் மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் உரையாற்றினார். அப்போது தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது என கூறிய நிர்மலா சீதாராமன் கொரோனா காரணமாக, மக்களிடம் செல்லவும், மக்களிடம் சென்று பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் பிரதமர் மோடியின் முயற்சியால், கிராமத்தில் இணையதள வசதி வந்து உள்ளது. இதனால், நமது கருத்தை மக்களிடம் தெரிவிக்க முடிகிறது. தேர்தல் பரப்புரையில் பாஜக அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
பதவி ஆசை காரணமாக அவசர நிலையை அமல்படுத்திய காங்கிரஸ் கட்சி தற்போது ஜனநாயகத்தைப் பற்றி பேசுவது வேதனையளிக்கிறது. திமுக தலைவர்கள் மீது அடக்குமுறையை ஏவியது காங்கிரஸ் கட்சி;ஆனால் இன்று திமுக காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்று கூறிய அவர் விநாயகர் சிலை குறித்தும் அதில் பேசுகையில் சீனாவை இந்தியா அதிகமாக நம்பியிருப்பதை குறைத்து, மேலும் உற்பத்தியை அதிகரிக்கவும் வேலை வாய்ப்புகளை வழங்க உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை ஆனால் சீனாவிலிருந்து விநாயகர் சிலைகள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது ஒன்றும் தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது என்று நிர்மலா சீதாராமன் அதில் கேள்வி எழுப்பினார்.