தொழிற்சாலை அமைக்க உகந்த மாநிலமாக தமிழகம்..நிர்மலா சீத்தாராமன் புகழாரம்…!!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலாசீதாராமன் தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றினார்.
தமிழக அரசு சார்பில், சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24ஆம் தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வானூர்தி மற்றும் தொழில் பாதுகாப்பு கொளகையை வெளியீட்ட்டார். பின்னர் அவர் பேசியதாவது தொழிற்சாலை அமைப்பதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.நுற்றாண்டுகளாக தமிழகம் தொழில்துறையில் சாதித்து வருகின்றது.சோழர் காலத்தில் இருந்து தமிழகம் வர்த்தக மையமாக இருந்து வருகின்றது.கடந்த ஐந்து வருடங்களில் இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சியில் வேகமெடுத்து வருகின்றது. நாட்டின் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்காற்றி வருகின்றது.தமிழகம் மின் உற்பத்தியில் சிறந்து விளங்கி மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார்.