வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறிந்து நிர்மலா தேவி ரகளை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாககுற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவி சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொள்கிறார்.
சில நாள்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தனக்கு சாமி வந்து இருப்பதாகவும் அருப்புக்கோட்டை தர்காவில் தனக்கு பேய் பிடித்து விட்டதாகவும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொண்டார்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியன் நகரில் அவர் குடியிருக்கும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை வெளியே தூக்கி எறிந்து உள்ளார்.மேலும் அக்கம்பக்கத்தினருக்கு சொந்தமான காரின் கண்ணாடிகளை உடைத்து ரகளை ஈடுபட்டார்.
இதனால் அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் நிர்மலா தேவி கதவை பூட்டிக் கொண்டார். வீட்டில் இருந்த நிர்மலா தேவியை அவரது அண்ணண் நீண்ட நேரமாக கூப்பிட்டும் நிர்மலா தேவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.நிர்மலா தேவி கதவை திறந்து வெளியே வந்ததால் தான் விசாரிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர்.