11 மாத சிறை… கிடுக்குப்பிடி விசாரணை… ஜாமிலில் வெளியே வந்த பேராசிரையை நிர்மலாதேவி!!
- கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மாணவியை தவறாக வழிநடத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி.பதினொரு மாத விசாரணைக்கு பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார். மதுரை அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் மாணவிகளை தவறாக வழி நடத்தியதன் காரணமாக அந்த கல்லூரியில் வேலை செய்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயம் பெரிய ஆனால் சிபிசிஐடி இந்த வழக்கை ஏற்று விசாரணை நடத்தி வந்தது . மேலும் இந்த வழக்கில் அதே கல்லூரியில் பணிபுரியும் முருகன் என்றால் மற்றொரு பேராசிரியருக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பன் என்பவருக்கும் தொடர்புள்ளதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருந்தார்
இந்நிலையில், நிர்மலா தேவியின் சகோதரர் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் ஜாமின் கொடுத்து கையெழுத்திட்டனர். இதனால், நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது.
இதையடுத்து, சுமார் 11 மாதங்கள் சிறையில் இருந்த நிர்மலா தேவி ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.