மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : நிர்மலா தேவி உள்ளிட்டோர் மீண்டும் ஆஜராக உத்தரவு

- மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் நிர்மலா தேவி.
- நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் வருகின்ற 27-ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா தேவி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கூர் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் . கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.இந்த வழக்கில் தொடர்புடைய பல்கலைகழக உதவி பேராசிரியர்கள் முருகன்,கருப்பசாமி ஆகியோர் ஜாமீனில் உள்ளனர்.
இந்த நிலையியில் வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது அவர்களுக்கு வருகின்ற 27-ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.