பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9பேர் சஸ்பெண்ட்
சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் பேருந்தை சிறைபிடித்து பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் பஸ் டே கொண்டாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் பஸ் டே கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .பஸ் டே கொண்டாடியதற்காக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.