நீலகிரி: ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

madras high court

நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை.

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹெலிடூரிசியம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

காடுகளுக்கு இடைப்பட்ட நகரப்பகுதியில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் வணிக ரீதியான திட்டங்களால் பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டனர்.

மலை பகுதிகளில் ஹெலிகாப்டர்களை இயக்குவதால் யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால், நீலகிரியில் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊட்டியில் 200 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக, ஹெலிடூரிசம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்