நீலகிரி : கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்....!

Tea plantation workers in the Nilgiris are on strike demanding extra bonuses.

நீலகிரியில் கூடுதல் போனஸ் கோரி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு கூடுதல் போனஸ் வேண்டும் என கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதமே நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை எனவும் விரைவில் தங்களுக்கான தீபாவளி போனஸ் வழங்க வேண்டுமெனவும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் தற்பொழுது 20% போனஸ் கேட்ட நிலையில், தங்களுக்கு 10 சதவீதம் மட்டுமே தீபாவளி போனஸாக வழங்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக போனஸ் வேண்டுமெனவும் கோரி தொழிலாளர்கள் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.